November 22, 2024

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் சி.யமுனாநந்தா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம்  260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தின் காசநோய் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மட்டும்  160 காச நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக இந்த வருடம் 260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் கொரோணாவிற்கு  பின்னர் இருமல் அறிகுறியுடையவர்கள் வைத்தியசாலைக்கு வருவது குறைவடைந்துள்ளது

50பேருக்கு  மேல் காச நோய்இனங் காணப்படாமல் உள்ளார்கள் இவர்களுக்கு  விழிப்புணர்வினை ஏற்படுத்த  வேண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலும் காச நோய்க்குரிய சிகிச்சைகள் சளிப்பரிசோதனை செய்யக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன

அடுத்ததாக யாழ்மாவட்டத்தினை பொறுத்தவரை காச நோயாளர்களுக்கான பிரத்தியேக வைத்தியசாலை மயிலிட்டியில் அமைவது நல்லது அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மூலம் மேற்கொள்ள வேண்டும் உலக சுகாதார நிறுவனமும்  பொதுமக்களும் கொவிட் 19-பாதிலிருந்து   படிப்பினையை கற்றுக் கள்ளவேண்டும் அதாவதுபொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்

பொதுவாக சுவாச தொற்று நோய்கள் இவ்வாறு வரும்போது அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்கான வைத்தியசாலை மிகமிக இன்றியமையாததாகும் அதனை நாங்கள் இந்த கொரோணா விற்கு பின்பான ஒரு படிப்பினையாக கருத்தில் கொண்டு சுவாச தொற்று நோய்களை தடுப்பதற்குரிய பிரத்தியேக வைத்தியசாலையை மயிலிட்டியில் வைப்பதற்கு அரசாங்க அதிபரின் உதவியுடனும் வடமாகாண ஆளுநரின்  உதவியுடனும் மேற்கொள்ள வேண்டும்

இது கடந்த 30 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்  காச நோயாளிகளுக்கு சிகிச்சை  மற்றும் காச நோயினைஇல்லாது செய்வதற்கான  முயற்சியை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்

மேலும் காசநோயினை கண்டறியPCR   தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது

அது தற்போது யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள ஆய்வுகூடத்திலும் உள்ளது   கொரோணா  நோயினை கண்டறிவதற்காக கொண்டு வரப்பட்ட PCR கருவி  மூலமும் காசநோயை கண்டுபிடிக்கலாம் எனவே   யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையின்சகல பகுதிகளிலும் கொரோனாவினை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் PCR கருவிகளை காசநோயை கண்டறிவதற்கும் பயன்படுத்தினால்  காசநோயினை இன்னும் விரைவாக  கண்டறிந்து குணப்படுத்துவதோடு இலங்கையிலிருந்து காச நோயை முற்றாக இல்லாதொழிக்க முடியும்

கொரோணா நோயை கட்டுப்படுத்துவதில் நாங்கள் கண்ட வெற்றியை காச நோயாளர்களையும் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு இந்த PCR கருவியினை பயன்படுத்த வேண்டும்

கொரோணா நோய் தொற்றின்  பின்னர்  காச நோய் கண்டறிதல் வீதம் குறைந்துள்ளது இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று நோயாளிகள் வராமல் இருக்கலாம் அடுத்ததாக முகக்கவசம் அணிவதனால் காசநோய் தொற்று குறையடைவதற்கும் சாத்தியக்கூறு காணப்படுகிறது என்றார்