யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வரின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான பொன். சிவபாலனின் 22ஆவது வருட நினைவு மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் நடைபெற்றது
1998ஆம் ஆண்டு இதே நாள் மேயர் பொன். சிவபாலன், பிரிகேடியர் சுசந்த மென்டிஸ், இராணுவ கப்டன் ஆர்.எம். கே. ராமநாயக்கா, யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்ரர் மோகனதாஸ், சிரேஷ்ட பொலிஸ் சுப்பிரின்டன் சந்திரா பெரேரா, ஏஎஸ்பி சரத் பெர்னான்டோ, ஏஎஸ்பி சந்திரமோகன், மாநகர சபையின் பதில் ஆணையாளரும் நிர்வாக உத்தியோகத்தருமான சு. பத்மநாதன், வேலைப்பகுதியின் பொறியலாளர் மா.ஈஸ்வரன், வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா ராஜரடணம், சுருக்கெழுத்தாளரும் தட்டெழுத்தாளருமான பொ. பத்மராஜா உட்பட 18 பேர் யாழ்ப்பாண மாநகரசபை இந்து விடுதியில் யாழ் மாநகரத்தின் போக்குவரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்ந்த கூட்டத்தின்போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது