துயர் பகிர்தல் பத்தக்குட்டி கைலாசபிள்ளை
திரு. பத்தக்குட்டி கைலாசபிள்ளை
(இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை நீர்ப்பாசன இலாகா)
தோற்றம்: 08 மார்ச் 1924 – மறைவு: 09 செப்டம்பர் 2020
சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவரும் மட்டக்களப்பு மண்டூரை பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும் கொண்டவருமான திரு பத்தக்குட்டி கைலாசபிள்ளை (இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை நீர்ப்பாசன இலாகா) இன்று 09/09/2020 சிட்னியில் காலமானார்.
இவர் திருப்பழுகாமத்தை சேர்ந்த செல்வரெத்தினத்தின் அன்பு கணவரும்,
காலம்சென்றவர்களான பத்தக்குட்டி ( தலைமை ஆசிரியர் ), தெய்வானை ஆகியோரின் அருமை புதல்வனும்,
காலம்சென்றவர்களான தம்பாபிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிரபாகரன் (ஆஸ்திரேலியா), கெளசலா( ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலா (ஆஸ்திரேலியா), சிவகலா (கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம்சென்றவர்களான சிவசுப்ரமணியம் (இளைப்பாறிய பொறியியலாளர்), கணேசபிள்ளை, சந்திரசேகரம் ( பேராசிரியர்) ஆகியோரின் அருமை சகோதரனும்,
ஜெயலக்சுமி, ராஜேந்திரா, சந்திரகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்துருக்கன், யதுர்சி, ஜனகன், ஆர்த்தி, பிரசாந்த் , சந்தியா, கவின், ஹரிணி ஆகியோரின் செல்ல பாட்டனும்,
அலானா, காவியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.