15 ஆம் திகதி யாழ் மாநகர சபை சந்தைகள் உணவகங்களில் பொலித்தீன் பாவனை தடை யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்
எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து யாழ் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட சந்தைகள் மற்றும் உணவகங்களில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்
இந்த வருட ஆரம்பத்திலிருந்து யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்டபகுதிகளில் பொலித்தீன் பாவனையை மிகக்குறைவாக்கல் அல்லது இல்லாமலாக்கின்ற ஒரு செயற்பாட்டிற்கான தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டிருந்தது அந்த நடை முறைகளை பின்பற்றுவது இந்த வருட ஆரம்பத்திலிருந்து நாட்டில் ஏற்பட்டகொரோணா தொற்று நோய் காரணமாக முன்னெடுக்க முடியாமல்போனது
அதனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இந்த தீர்மானத்தை யாழ் மாநகர சபைக்கு சொந்தமான சந்தைகளில் அதாவது மீன் சந்தை, இறைச்சிக்கடை மற்றும் மரக்கறி சந்தைகளில் உள்ள தொழிலாளர்கள் பொலித்தீன் பாவிக்க முடியாது என்ற தீர்மானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த வுள்ளோம் பொலித்தீனை பாவிக்க முடியாது அதற்குப் பிரதியீடாக கடதாசிப்பை,துணியிலான பைகளை பயன்படுத்தி கொள்ள முடியும்
இது நீண்ட காலத்துக்கு முன் நாங்கள் எடுத்த தீர்மானம் அந்த காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாது போனது தற்பொழுது முதல் கட்டமாக எங்களுடைய சந்தைகளில் இதை ஆரம்பிக்கின்றோம் அதேபோல் உணவகங்களில் உணவு கோப்பைகளுக்கு பிடிக்கும் ரிசுக்களும் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் பயன்படுத்த முடியாது அதற்கு பதிலாக வாழை இலை அல்லது தாமரை இலை அல்லது வாழை மடல் பயன்படுத்த முடியும்
இவ்வாறு பொலித்தீன் பாவனை தடுப்பதற்குரிய காரணம் என்னவெனில் எமது நாட்டிலுள்ள மாநகரங்களில் எமது யாழ் மாநகரசபை சுகாதார நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஒரு சுகாதார நகரமாக பிரகடனப்படுத்தப்பட உலக சுகாதார நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது
அதுமட்டுமில்லாது தெற்காசியாவிலேயே எங்களுடைய நகரம் அவ்வாறான ஒரு பிரிவுக்குள்உள்வாங்கப்பட்டுள்ளது சுகாதார நகரமாக உள்வாங்கப்பட்ட சூழ்நிலையில் சுகாதாரம் சார்ந்த விடயங்களில் ஒரு கணிசமான முன்னேற்றத்தை காட்ட வேண்டிய தேவை காணப்படுகின்றது
எனவே ஏற்கனவே எடுத்த தீர்மானத்திற்கமைய குறித்த நடவடிக்கைகளை எமது ஆளுகைக்குட்பட்ட சந்தைப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின்றோம் அதேபோல் உணவகங்களிலும் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளோம் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் இந்த நடைமுறையை நாங்கள் கடுமையாக கடைப்பிடிக்க இருக்கின்றோம்
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் தமது மாநகரசபைக்கு உட்பட்ட சந்தைகள் மற்றும் உணவகங்களில் பொலித்தின் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதொன்று எனவே எமது ஆளுகைக்குட்பட்ட சந்தைகளுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய செல்லும்பொதுமக்கள் நீங்களும் பொலித்தீன் பைகளை எடுத்துச் செல்லாது துணிகளினால் ஆன பைகள் ,அல்லது கடதாசி பைகளை எடுத்துச் செல்வதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தல் செயற்திட்டத்தினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்