சிறிது நாட்களுக்கு சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க நினைக்கிறீர்களா..?
சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் அல்லது அதில் வரும் சில பதிவுகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என நினைத்தால் அதிலிருந்து சில நாட்களுக்கு விலகியிருப்பது நல்ல யோசனை.
சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் அல்லது அதில் வரும் சில பதிவுகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என நினைத்தால் அதிலிருந்து சில நாட்களுக்கு விலகியிருப்பது நல்ல யோசனை. அப்படி நீங்கள் முடிவு எடுத்திருந்தால் எப்படி பின்பற்றுவது என்று பார்க்கலாம்.
லாக் அவுட் : முற்றிலுமாக விலகியிருக்க நினைத்தால் லாக் அவுட் செய்துவிடுங்கள் அல்லது சில நாட்களுக்கு டி ஆக்டிவேட் செய்துவிடுங்கள். இதனால் அவற்றை பயன்படுத்த எண்ணம் வராது.
ஆப்ஸ் நீக்கம் : நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்ஸை சிறிது நாட்களுக்கு செல்ஃபோனிலேயே இல்லாமல் அன் இன்ஸ்டால் செய்து விடலாம்.
எச்சரிக்கை மணி : சமூக வலைதளங்களை அடிக்கடி திறந்து பார்க்கத் தூண்டும் நோடிஃபிகேஷன் ஆப்ஷனை அணைத்துவிடுங்கள். இதனால் நீங்கள் தேவைப்படும்போது மட்டும் ஓப்பன் செய்து பார்ப்பீர்கள்.
ஃபோன் இல்லாத வாழ்க்கை : ஃபோன் இல்லாமல் இருக்க முயற்சி செய்து பாருங்கள். ஃபோனைத் தொடாமல் உங்கள் நேரத்தை எப்படி கையாளுவது என உங்களுக்கு நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள்.
டேட்டா லிமிட் : சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டில் வைக்க செல்ஃபோன் ஆப்ஷனில் இருக்கும் டேட்டா லிமிட் ஆப்ஸ் தேர்வில் சோஷியல் மீடியா ஆப்ஸ்களை தேர்வு செய்து வைத்தால் அவற்றிற்கு மட்டும் இண்டர்நெட் பயன்படுத்த முடியாது. அதிலிருந்து எந்த நோட்டிஃபிகேஷனும் வராது. நீங்களும் டேட்டா இல்லாமல் பயன்படுத்த முடியாது.
பொழுதுபோக்கு : பொழுதுபோக்கிற்காக அதிகம் சமூக வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்த்து இதனால் நீங்கள் இழந்த, செய்யத் தவறிய விஷயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்புங்கள்.