Mai 12, 2025

இலங்கை அதிசயம்:மரண தண்டனை கைதி எம்பியானார்?

ஒருவரை சுட்டுக் கொன்ற மரண தண்டனை கைதியும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவருமான பிரேமலால் ஜயசேகர இன்று (08) சற்றுமுன் நாடாளுமன்றில் எம்பியாக பதவியேற்றுள்ளார்.

மரண தண்டனை கைதியான இவர் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்று சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் செல்ல இடைக்கால அனுமதி வழங்கி மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.