März 28, 2025

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை – இந்தவாரம் தீர்மானிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு….

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன் போது 20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்படும். ஏற்கனவே எங்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.