März 28, 2025

ஊடகப்பேச்சாளர் சுமந்திரனே: மாவை ஆதரவு!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனை நீடிக்க மாவை சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் இம்முயற்சிக்கு அவரது மகன் கலையமுதன் முழு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதனிடையே 20வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பங்காளிக்கட்சிகள் தமக்கு ஊடகப்பேச்சாளர் பதவி வேண்டுமென விடாப்பிடியாக நின்றிருந்தன.

ஆயினும் எம்.ஏ.சுமந்திரன் அதனை நீடித்து தனக்கு வழங்க உள்ளக அலுவல்களில் குதித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழரசுக்கட்சிக்குள்ள பெரும்பான்மையினை முன்னிறுத்தி மாவையும் ஆதரவு சமிக்ஞை வெளிப்படுத்தியுள்ளார்.