பதவி துறக்கிறார் அங்கயன்?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து டகாலடியும் செய்து வெற்றி
பெற்றி அங்கயன் இராமநாதன் அரசியலில் இருந்து விலகுவேன் என சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளார்.தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவேக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அண்மையில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.
இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன், சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிடுகையில்,
தன் மீதான குற்றச்சாட்டுக்களை சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவதற்கு தாம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பிற்கு முதல் நாள் கூட்டமைப்பு முதல் அங்கயன் ஈறாக சாராயப்போத்தல்கள் மற்றும் பியர் போத்தல்களை அள்ளி வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.