கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்! சம்பந்தன் எச்சரிக்கை
அரசாங்கத்தின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைப்பது மக்களுக்கும், தேசத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.
அத்துடன், 19வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 19 வது திருத்தத்தை எந்த சூழ்நிலையிலும் தேசப்படுத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடு உண்மையான ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குறுகிய கால சதித்திட்டத்தின் 52 நாள் ஆட்சியின் போது, உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது, இதனை அனைத்து சட்டமியற்றுபவர்களும் கடைபிடிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைப்பது மக்களுக்கும், தேசத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எவ்வாறியினும், தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், தேசத்தை செழிப்புக்கான பாதையில் வழிநடத்துவதற்கும் இலக்காகக் கொண்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு எப்போதும் ஆதரவளிக்கும் என சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.