தென்கொரியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது!
கொரோனா தாக்கம் அதிகரிப்பு… தென்கொரியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தென்கொரியாவில் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் மாத பிற்பாதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மூன்று இலங்கங்களில் இருந்து வருகிறது. மே, ஜூன் ஆகிய மாதங்களை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 267 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,449-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 326 பேர் உயிரிழந்தனர்.
தென்கொரியாவில் அதிக அளவாக தேவாலயங்கள், உணவகங்கள் மற்றும் கல்விநிலையங்கள் மூலமே தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தற்போது உணவகங்கள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதித்து, தேவாலயங்களை தற்காலிகமாக மூட தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.