குடைச்சல் கொடுக்கும் மஹிந்த அரசு,நாட்டை விட்டு ஓட இரட்ணஜீவன் ஹூல் திட்டம்!
தேர்தல் காலத்தில் மகிந்த அன் கோவிற்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் ஹூல் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று அபாயம் இல்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒப்பமிட்டு சான்றிதழ் வழங்கிய பின்பு தனது மகளை அழைத்து வந்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் ஹூல் தொடரபில்; யாழ்ப்பாணம் பொலிசார் நேற்றைய தினம் இரண்டு மணிநேரம் வாக்கு மூலம் பெற்றதோடு இன்றும் தொடரவுள்ளது.
100 நாட்கள் கடந்துவிட்ட பின்பு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிசார் இவை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றதோடு நாளையும் பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 100 நாட்கள் கடந்து விட்ட பின்பு இந்த விடயத்தை பொலிசார் தூசு தட்டுவது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
தேர்தல் ஆணைக் குழு உறுப்பினர் இரட்ணஜீவன். எச் ஹூலின் மகள் இலண்டனில் இருந்து மே மாதம் வந்தவரை உறுப்பினர் அழைத்து வந்தமையினால் உறுப்பினரை 14 நாட்கள் கோவிட் முகாமிற்கு அனுப்ப வேண்டும் என ஆணைக்குழு அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் மூவரில் ஒருவரான இரட்ணஜீவன். எச் ஹூலின் மகள் இலண்டனில் கல்வி கற்று வந்தார். இவ்வாறு கல்வி கற்பவர் நாடு திழும்பிய மாணவர்களுடன் கடந்ந மே மாதம் 03ம் திகதி விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்
நாடு திரும்பிய இரட்ண ஜீவன் எச் ஹூலின் மகள் கொரோனா அச்சம் காரணமாக நீர்கொழும்பில் உள்ள ஜெட்வின்புளு நட்சத்திர விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்த பட்டிருந்தார்.
இதன் பின்பு பீ.சி.ஆர் பரிசோதனையின் பின்பு கோவிட் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு சுகாதாரப் பணிப்பாளர் அணில் ஜெயசிங்கா மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் ஒப்பமிடப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது. குறித்த சான்றிதழை பெற்றவரை தந்தையார் என்ற முறையில் உறுப்பினர் சென்று அழைத்துச் சென்றுள்ளார். இதுவே சர்ச்சைக்கு காரணமாகிவிட்டது.
இதனால் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அழைத்து சென்ற சாரதி , தேநீர் வழங்கிய அலுவலக உதவியாளர் மற்றும் உறுப்பினரை 14 நாட்கள் கோவிட் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தியோகத்தர்கள் பலரும் தெரிவித்த நிலையில் உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வீடு சென்றுள்ளார். இவ்வாறு வெளியேறும் சமயம் கொரோனா தொற்று இல்லை என சுகாதார அமைச்சினால. வழங்கிய சான்றிதழின் பிரதி ஒன்றினை ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியாவிடம் கையளிக்கப்பட்டது
ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் அவரது மகள் ஆகியோர் அமெரிக்க குடி உரிமை கொண்டவர்கள் .இந்நிலையில் அழுத்தங்கள் அதிகரித்தால் அவர் மீண்டும் அமெரிக்காவிற்கு வழமை போல இடம்பெயராலாமென நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.