இந்தியாவிற்கு சீனா கடும் எச்சரிக்கை…..
சீனாவுடன் போட்டி போட விரும்பினால் கடந்த காலங்களை விட இந்தியாவை ‘கடுமையான’ இராணுவ இழப்புகளுக்கு ஆளாக்க சீனாவால் முடியும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
அணு ஆயுத நாடுகளான இந்தியா-சீனா இடையே ஒரு புதிய எல்லை பிரச்சினை வெடித்த பின்னர் சீன ஊடகம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது
மேற்கு இமயமலையில் சர்ச்சைக்குரிய எல்லையில் ஒரு மலையை ஆக்கிரமிக்க சீன படைகள் மேற்கொண்ட முயற்சியை இந்தியப் படைகள் முறியடித்ததாக இந்திய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
அதே நாளில், இந்தியா படைகள் சட்டவிரோதமாக பகிரப்பட்ட எல்லையை தாண்டிவிட்டது, இந்திய இராணுவம் உடனே படைகளை திரும்பப் பெறுமாறு சீனாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கோரினார்.
சீன எல்லைப் படைகள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியா போட்டியில் ஈடுபட விரும்பினால், இந்தியாவை விட சீனாவிடம் அதிகமான கருவிகள் மற்றும் திறன்கள் உள்ளன.
இந்தியா இராணுவ மோதலை விரும்பினால், சீன இராணுவம் 1962-ல் செய்ததை விட இந்திய இராணுவம் மிகவும் கடுமையான இழப்புகளை சந்திக்க வைக்கும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.