கோமா நிலையில் இருந்த பிரணாப் முகர்ஜி மரணம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 84 வயதில் காலமாகியுள்ளார் ,கடந்த 9ம் தேதி தமது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பரிசோதனைகளில், அவரின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அறுவை சிகிச்சை செய்யப்பட அதன் பின்னர் பிரணாப் உடல்நிலை மோசமடைந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு, உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது.
அவர் ஆழ்ந்த கோமா நிலையில் பிரணாப் இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந் நிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.