இரவில் நிதானமில்லாமல் இருப்பவர்களே சுமந்திரனின் ஆதரவாளர்கள் -தமிழ் அரசு கட்சி கூட்டத்தில் வெளியான பகீர் தகவல்!
சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழு இரவில் நிதானமிழந்திருப்பவர்கள். அவர்கள் கண்டபடி கட்சிக்கு எதிராக நிதானமிழந்து எழுதியதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணங்களில் ஒன்று என இன்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது, கட்சிக்குள் உருவாகியுள்ள இரண்டு அணியினரும் மாறிமாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள். இன்றைய கூட்டத்தில் கட்சியின் பல உறுப்பினர்களை நீக்க வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தார். கட்சியின் வேட்பாளர்கள் யாரைப்பற்றியும் தான் பகிரங்கமாக விமர்சித்ததில்லை, ஆனால் என்னை பலர் விமர்சித்தார்கள் என கூறி, உதயன் பத்திரிகையையும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஈ.சரவணபவன், சுமந்திரன் நேரடியாக என்னை விமர்சிக்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவரது அடிப்பொடிகள் என்னை விமர்சித்தார்கள், அதன் பின்னணியில் சுமந்திரன் இருந்தார் என குற்றம்சாட்டினார்.
பிரகாஷ் (மருதனார்மடத்தில் சிங்கள அழகியுடன் சிக்கியவர்), ஹரிகரன், திலீபன், ஆலங்குழாய் சிவராசா, சுமந்திரனின் மாமா டி.பி.எஸ்.ஜெயராஜ் என சில பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் பகலில் நிதானமாக இருந்தாலும், இரவில் நிதானமில்லாமல் இருப்பவர்கள், அவர்கள் ஏதோ ஒன்றுக்காக சுமந்திரனை ஆதரித்து எழுதுகிறார்கள்.
முகநூலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அவதூறு கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான் என்பதையும் சுட்டிக்காட்டினார். 1980களில் ஜெயராஜ் உதயனில் வேலைதேடி வந்ததையும், அப்போது வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லையென குறிப்பிட்டார்
அவர்கள் மதுபானத்திற்காக எழுதுகிறார்கள் என பூடகமாக சரவணபவன் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.