März 28, 2025

சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வின்போது கொலை குற்றத்துக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகரவை பங்கேற்க செய்யவேண்டும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதனை நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பமட்டும் நேற்றைய அமர்வுக்கு ஏன் பிரேமலால் ஜெயசேகர அழைத்து வரப்படவில்லை என்று அமர்வின்போது சபாநாயகாரிடம் சபையில் வைத்து கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் தமது மரண தண்டனை தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்துள்ளநிலையில் அவரை நாடாளுமன்றத்துக்கு இன்னும் அழைத்துவரப்படாமை குறித்து சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்ற அமர்வுக்கு அனுமதிக்காமையானது, அவருக்கு விருப்புத்தெரிவு வாக்களித்த வாக்காளர்களின் உரிமைகளை மீறும் செயலாகும் என்ற அடிப்படையில் அவர் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமுடியும் என்று தெரிவித்தார்.