November 22, 2024

இனப்படுகொலையாளி தண்டணைக்கு எதிராக மேல்முறையீடு!

போஸ்னியாவின் கசாப்புக்காரன்  என்று அழைக்கப்படும் முன்னாள் போஸ்னிய செர்பிய தளபதி ராட்கோ மிலாடிக், ஹேக்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவர் ஆயுள் தண்டணையை பெற்றதைத் எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.மிலாடிக்கின் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல முறை தாமதமான பின்னர் மேல் முறையீடு தொடர்பான விசாரணைகள் இன்று தொடங்கியது.

ராட்கோ மிலாடிக் 2017 நவம்பரில் ஆயுள் தண்டனை பெற்றார்.

செவ்வாய்க்கிழமை அமர்வு தொடங்கியவுடன், மிலாடிக் வக்கீல்கள் ஐ.நா. நீதிமன்றத்தில், ஒரு மருத்துவ குழு பங்கேற்கும் திறனை மறுபரிசீலனை செய்யும் வரை நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்று கூறினார். அவரது விசாரணையின் போது குற்றச்சாட்டுகளாக கூறப்பட்ட „திட்டமிடப்படாத சம்பவங்கள்“ குறித்து அவர் தவறாக தண்டிக்கப்பட்டார் என்று அவர்கள் வாதிட்டனர்.