ஆமி தான் நல்லம்:டக்ளஸ் நிலைப்பாடு?
வடக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெனெரல் சந்திரசிறிக்கு பின்னர் நியமிக்கபட்ட எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஐயம் செய்த அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் இவ்வாறு தெரிவித்தார்.
13 வது திருத்தச்சட்டத்தை தென்னிலங்கை தலைவர்கள் மாத்திரம் எதிர்க்கவில்லை தமிழ் தலைவர்களும் அதனை எதிர்த்துள்ளனர். 13வது திருத்தச்சட்டததை விடுத்து வேறு ஒரு தீர்வு வேண்டும் என்று புலித்தலைமை மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அன்று இதனை எதிர்த்தார்கள்.
எனினும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. என்னுடைய நிலைப்பாடும் அதுவே. அதுதான் சாத்தியமானது. மக்கள் எனக்கு கூடிய ஆசனங்களை தந்திருந்தால் இவற்றை நான் இலகுவாக தீர்த்திருப்பேன்.
வடக்கில் இராணுவ அதிகாரியை ஆளுனராக நியமிக்கும் நிலைப்பாடு இதுவரை அரசிடம் இல்லை. எனினும் முன்னாள் ஜெனெரல் சந்திரசிறியை ஆளுனராக நியமிக்குமாறு இந்த அரசாங்கம் வந்தவுடன் நான் கோரியிருந்தேன்.
ஏனெனில் அவருக்கு பின்னர் வருகைதந்த எந்த சிவில்அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை. எனினும் ராணுவ அதிகாரியை நியமிக்காமல் சிவில் அதிகாரியையே நியமிக்க வேண்டும் என்று ஐனாதிபதியும் பிரதமரும் அன்று கூறினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.