März 28, 2025

மண்டைதீவும் பறிபோகின்றது?

 

புதிய அரசு இராணுவ நலன்களிற்காக இடம்பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அடுத்து மண்டைதீவை நோக்கி பார்வையினை நகர்த்தியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை மண்டைதீவில் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மண்டைதீவின் கணிசமான மக்கள் காணிகளை தொடர்ந்தும் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ளது.

இந்நிலையில் அதனை விடுவிக்க மறுத்துவருவதுடன் தற்போது புதிதாக கிரிக்கெட் மைதானத்திற்கென மேலும் காணிகளை சுவீகரிக்க முற்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே அரசினால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தேசிய விளையாட்டு மைதானம் கவனிப்பார் அற்று கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.