ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணத்தை வென்றது பேயர்ண் மியூனிக்!
போர்த்துக்கல் லிஸ்பனில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியில் யேர்மனி பேயர்ன் மியூனிக் விளையாட்டுக் கழகம் பாரிஸ் செயிண்ட் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிமை நடந்த போட்டியில் முன்னாள் பாரிஸ் செயின்ட் முன்னாள் வீரரும் யேர்மனி பேயர்ன் மியூனிக் விளையாட்டுக் கழகம் வீரருமான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த விங்கர் கிங்ஸ்லி கோமன் 59வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து பேயர்ன் மியூனிக் வெற்றியை உறுதி செய்தார்.
கோரோனா வைரஸ் காரணமாக உதைபந்தாட்டப் போட்டி பார்வையாளர்கள் அற்ற மூடிய விளையாட்டுத் திடலில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
ஐரோப்பிய கிண்ணத்தை யேர்மனி பேயர்ன் மியூனிக் விளையாட்டுக் கழகம் 6வது தடவையாக வெற்றி பெற்றுள்ளது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.