März 28, 2025

இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன!- பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும்.எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தே அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கான ஆணையே கடந்த தேர்தலின் போது ஏக மனதாக வடக்கு கிழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டக்ளஸ் அங்கயன் உட்பட அனைத்து தமிழர் பிரதிநிதிகளும் தமிழர்களின் தேசத்தை தமிழர் உரிமையை நிராகரித்து இத்தேர்தலில் வெற்றியடையவில்லை. எனவே அனைத்து தமிழர் பிரதிநிதிகளும் தமிழர்களின் அரசியல் அங்கீகாரத்தை நிலைநிறுத்தியே வெற்றியடைந்துள்ளனர்.

இந்த வகையில் தமிழர்களின் உரிமைகள் தமிழர்களிற்கான நீதி தமிழர் இனவழிப்புக்கான நீதி பெறப்படவேண்டும்.

இன்றைய (21/08/2020) பாராளுமன்ற அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்