நட்டாற்றில் ரணில்,மைத்திரி?
புதிய அரசில் வேலையற்றிருக்கும் மைத்திரி மற்றும் ரணிலின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பதவியை வழங்குவது தொடர்பான இணக்கம் காணப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு யோசனைகளை முன்வைக்க குழு ஒன்றை நியமிக்கவும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவராக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் தனக்கு வழங்கப்பட உள்ள பதவி குறித்து எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் வரை தேசிய பட்டியல் எம்.பி.யை நியமிக்க முடியாது என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் மூத்த உறுப்பினரான ஜோன் அமரதுங்க இந்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
புதிய தலைவர் தெரிவாகும் வரை தேசிய பட்டியல் எம்.பி. நியமனம் தாமதமாகும் என அவர் மேலும் கூறுகிறார்.
தற்போது நான் தேசியப் பட்டியலில் முன்னணியில் உள்ளேன், அதே போல் மூத்த உறுப்பினராகவும் இருக்கிறேன்.
தேசிய பட்டியல் இடத்திற்கு பொருத்தமான நபர் என்றாலும், கட்சி எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.