சத்தியலிங்கத்திற்கு கதிரை வேண்டாமாம்?
கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி பற்றி ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவிற்கு தார்கமீக பொறுப்பேற்று மாவட்ட கிளைத் தலைவர் பதவியில் இருந்து மருத்துவர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார்.
முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரான ப.சத்தியலிங்கம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
இதனிடையே தேர்தல் தோல்வி தொடர்பில் ஆராய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு 29ம் திகதி வவுனியாவில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.