85 அரச நிறுவனங்கள் மஹிந்த வசமாகியது..!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 85 அரச நிறுவனங்கள் கைவசம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
70 வயதைக் கடந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் 85 அரசு நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முதியவர் ஒருவர் எவ்வாறு அவற்றை வினைத்திறன் மிக்கதாக இயக்க முடியும்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அமைச்சுப் பதவி வகிக்க முடியாது அப்படி இருந்தும் அரசியலமைப்பை மீறும் வகையில் பாதுகாப்பு அமைச்சை அவர் தன்வசம் வைத்துள்ளார்.
அடுத்ததாக மகிந்த ராஜபக்ஷவுக்கு 74 வயதாகிறது அவரின் கீழ் 85க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்புலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படும் என்பது தெரியாது. சிலவேளை தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் தமக்குத் தேவையான வகையில் ராஜபக்ஷர்கள் அரசமைப்பை உருவாக்க கூடும் என்ற அச்ச நிலையும் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.