November 22, 2024

கிறீஸ் – துருக்கி பதற்றம்! போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பலை அனுப்புகிறது பிரான்ஸ்!

கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று் புதன்கிழமை அறிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை நிறுத்துமாறு துருக்கிக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது ஐரோப்பிய நாடான கிறீஸ் நாட்டுடனான பதற்றங்களை அதிகரித்துள்ளது என்று மக்ரோன் கூறியுள்ளார்.

போர்க்கப்பல்களுடன், மத்தியதரைக் கடலின் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியில் துருக்கிய நில அதிர்வு ஆய்வுக் கப்பலான ஓருக் ரெய்ஸின் வருகையால் இந்த வாரம் பதற்றம் ஆரம்பமாகியது.

பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு பிரான்ஸ் இரண்டு ரஃபேல் போர் விமானங்களையும், கடற்படைக் கப்பலான ‚லாபாயெட்டையும்‘ அனுப்பும் என்று பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தின் நிலைமையைக் கண்காணிக்கவும், சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதியைக் குறிக்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.