März 28, 2025

டக்ளஸ் கடமையில்: வாடிகள் தீவைப்பு!

வடமராட்சியின் பருத்தித்துறை தும்பளை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டிருந்த கடலட்டை வாடிகள் அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினை தாண்டி அமைக்கப்பட்ட வாடிகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் பதவி பிரமாணமேற்று இன்று தனது கடமைகளை ஏற்றுள்ள நிலையில் தீவைப்பு நடந்துள்ளது.

இதனிடையே டக்ளஸ் ஆதரவுடனேயே தென்னிலங்கை மீனவர்களது வாடிகள் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.