März 28, 2025

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன் தெரிவாகியிருந்தார்.

கன்னி நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அன்றைய தினமே எம்.பிக்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள். ஆனால் க.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினமே (13) முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இன்று காலையில் முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவு முற்றத்தில் இந்த பதவியேற்பு இடம்பெறும்.