சிங்கள தேசத்தின் பாதுகாப்பு கோத்தாவிடமே?
புதிய அமைச்சரவை நியமனம் இன்று(12) கண்டி தலதாமாளிகையில் அமைந்துள்ள மகில்மடுவவில் நடைபெற்றது. பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இம்முறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளுக்கான அமைச்சர் நியமனம் பெறுபவர்கள்:
பாதுகாப்பு அமைச்சர் – கோத்தபாய ராஜபக்ஸ
நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் – மஹிந்த ராஜபக்ஸ
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் – நாமல் ராஜபக்ச
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் – ரோஹித அபேகுணவர்தன
சுற்றுலாத் துறை அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
பெருந்தோட்டத் துறை அமைச்சர் – ரமேஷ் பத்திரண
எரிசக்தி அமைச்சர் – உதய பிரபாத் கம்மன்பில
நீர்வழங்கல் துறை அமைச்சர் – வாசுதேவ நாணாயக்கார
கமத்தொழில் துறை அமைச்சர் – மஹிந்தானந்த அளுத்கமகே
காணி அமைச்சர் – எஸ். எம். சந்திரசேன
சுற்றாடல் துறை அமைச்சர் – மஹிந்த அமரவீர
நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
கைத்தொழில் துறை அமைச்சர் – விமல் வீரவங்க
மின்சக்தித் துறை அமைச்சர் – டலஸ் அழகப்பெரும
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் – சமல் ராஜபக்ஸ
வெகுசன ஊடக அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல்ல
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – ஜனக்க பண்டார தென்னகோன்
வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் – R.M.C.B. ரத்நாயக்க
வர்த்தகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன
போக்குவரத்து துறை அமைச்சர் – காமினி லொக்குகே
கடற்றொழில் துறை அமைச்சர் – டக்ளஸ் தேவாநந்தா
வௌிவிவகார அமைச்சர் – தினேஷ் குணவர்தன
சுகாதார அமைச்சர் – பவித்ராதேவி வன்னியாரச்சி
தொழில் அமைச்சர் – நிமல் சிறிபால டி சில்வா
கல்வி அமைச்சர் – ஜீ.எல். பீரிஸ்