ரணில் கதிரையினை கைவிடார்?
ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு செயற்குழு கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்க கட்சித்
தலைமையிலிருந்து விலக முடிவு செய்யவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் தேசிய பட்டியல் வேட்பாளருமான லசந்த கூணவர்தன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் தெரிவித்த கருத்துக்களை ஒரு தனியார் தொலைக்காட்சி தவறாகப் புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளதாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ரணிலின் சகாவான லசந்த கூணவர்தன தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்திறனுக்குப் பிறகு ரணில் தனது பதவியில் இருந்து விலகுமாறு கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் முதன் முறையாக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை மாத்திரமே பெற முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.