வடமாகாணசபையின் உதவி பிரதம செயலாளராக நீர்வேலி அத்தியார் இந்துவின் மாணவி :
வடமாகாண சபையின் உதவிப் பிரதம செயலாளராக நீர்வேலி வடக்கு காளிகோவில் ஒழுங்கையைச் சேர்ந்த திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர் வேலி வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையிலும் தொடர்ந்து அத்தியார் இந்துக்கல்லூ ரியிலும் கல்வி பயின்றார். அங்கிருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கலைப் பட்டதாரியாக வெளி யேறினார். பின்னர் இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார். சில காலங்களில் பதவிஉயர்வு பெற்று கிழக்கு மாகாணசபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவில் பிரதிச்செயலாளராகக் கடமையாற்றினார். இதன்போது 2012 ஆம் ஆண்டு இளம் முகாமைத்துவப் பயிற்சி நெறிக்காக புலமைப்பரிசில் பெற்று ஜப்பானுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றார். அண்மையில் வட மாகாணசபைக்கு மாற்றலாகி வந்த இவர் இவ்வாரம் இந்த உயர்பதவியைப் பொறுப்பேற்றிருக்கின்றார். 37 வயதேயான இவர் நீர் வேலி வடக்கு காளிகோவில் ஒழுங்கையைச் சேர்ந்த திரு, திருமதி. நடராசா தம்பதிகளின் புத்திரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.