மாவை,துரைராஜசிங்கம் வெளியே:சாம்,சிறீதரன்?
இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை தோற்றதாக கருதலாம். அவர்கள் ஒரு சில வாக்குகளால் தோற்கவில்லை. அவர்கள் தீர்மானமாக தோற்றுள்ளார்கள். ஆகவே அது குறித்து கட்சி நடவடிக்கை எடுக்கும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மோசடியாக தேர்தலில் வெற்றி பெற்றதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் தனது வதிவிடத்தில் அவசர ஊடக சந்திப்பொன்றை எம்.ஏ.சுமந்திரன் நடத்தியிருந்தார். கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம். உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என அப்பொழுது எம்.ஏ.சுமந்திரன தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. வடக்கு கிழக்கில் 20 அசனங்களை வழங்க வேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டோம். இப்பொழுது அதில் அரைவாசி எண்ணிக்கைதான் எங்களிற்கு கிடைத்துள்ளது. பத்து ஆசனங்கள்.இந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள முறை பல கரிசனைகளை எழுப்புகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலே நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த மக்கள் தீர்ப்பை நாம் பொறுப்புணர்வுடன் எற்றுக்கொள்வதுடன், அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டில் உடனடியாக நாங்கள் இறங்குவோம்.
மட்டக்களப்பில் நாம் 2 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். வன்னியில் 3 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் விட மோசமாக யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். வெளியே எஙகளை விட அதிகமாக- 4 ஆசனங்கள் உள்ளன.
இந்த பின்னடைவு சம்பந்தமாக கட்சிக்குள் சில கலந்துரையாடல்களை நடத்துவோம். அதிலும் முக்கியமாக இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை தோற்றதாக கருதலாம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.