மண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் முற்கொண்ட கிடைத்த தகவல்கள் பிரகாரம் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்துள்ளார்.அதே போன்று எதிர்பாராத விதமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
அதேவேளை சாள்ஸ் நிர்மலநாதன்,விநோதகரலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி யாழில் ஜந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் கட்சிகளது பங்காளிகளான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கயன் இராமநாதன் ஆகியோhரிற்கு பின்னால் ஜந்தாவது இடத்தில் கூட்டணி இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
அதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் படு தோல்வியடைந்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் விருப்பு வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தொடர்பில் சர்ச்சைகள் இரவிரவாக நீடித்திருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாயில் மீள் வாக்கெண்ண கோரிக்கை விடுத்துள்ளார்.இதனால் தாமதமேற்பட்டுள்ளது.
நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கமைய
யாழ்.மற்றும் கிளிநொச்சித் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் செல்லப் போகிறவர்கள் இவர்கள் தான்….
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
சிவஞானம் சிறீதரன்
தர்மலிங்கம் சித்தாத்தன்
சசிகலா ரவிராஜ்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி
அருந்தவபாலன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
அங்கஜன் இராமநாதன்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
டக்ளஸ் தேவானந்தா