November 23, 2024

யாழில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு!! அழுது கொண்டு வெளியேறிய சசிகலா ரவிராஜ்!!!

 யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு தடியடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள் இதுவரை ஏன் வெளியிடப்படவில்லையென வாக்கெண்ணும் மையத்தில் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்திற்கு வந்ததைத்தொடர்ந்து ஏனைய சில கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், யாழ். மாவட்ட நிலைவரப்படி, விருப்பு வாக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் த.சித்தார்த்தன் இரண்டாம் இடத்தில் நீடித்து வந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. அத்துடன், எம்.ஏ.சுமந்திரன் ஐந்தாவது இடத்தில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதையடுத்து, யாழ். வாக்கெண்ணும் மையத்திற்கு த.சித்தார்த்தன் வந்தபோது, அவர் நான்காமிடத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அத்துடன், முடிவை அறிவிக்காமல் தாமதப்படுத்துவதிலும், இந்த திடீர் மாற்றத்திலும் மர்மம் உள்ளதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அந்த வளாகத்தில் நின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரமுகர்கள் சிவாஜிலிங்கம், தம்பிராசா போன்றவர்களும் இணைந்த அதிருப்தி தெரிவித்தனர்.
தேர்தல் முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அங்கிருந்தவர்கள் குரல் எழுப்பினர். இதன்போது, பொலிஸார் தலையிட்டு தம்பிராசாவை அங்கிருந்து அகற்றினர்.