செல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று!
வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3ஆசனங்களையும்,பொதுஜனபெரமுன ஒரு ஆசனத்தையும் ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் றிசாத் பதியுதீன் ஒரு ஆசனத்தையும் பெறுகின்றனர்.
இதனிடையே வெறும் 11ஆயிரத்து 600 வாக்கினை பெற்ற ஈபிடிபி கட்சி சார்பில் போட்டியிட்ட் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு போராளியான திலீபன் என்பவர் விகிதாசார அடிப்படையில் தெரிவாகவுள்ளார்.
ஏற்கனவே யாழில் டக்ளஸ் வென்றுள்ள நிலையில் வன்னியிலும் ஒரு ஆசனத்தை ஈபிடிபி கட்சி பெற்றுள்ளது.
இதனிடையே குறித்த ஈபிடிபி சார்பில் வெற்றியீட்டிய உறுப்பினர் கூட்டமைப்பின் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்து தற்போது தேர்தலில் போட்டியிடும் சத்தியலிங்கத்தின் முன்னாள் உதவியாளர் என தெரியவருகின்றது.