März 28, 2025

திருகோணமலை மாவட்ட வாக்களிப்பு நிலவரமும்

திருகோணமலை மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 40வீத வாக்குப்பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 307 வாக்களிப்பு நிலையங்களிலும் சுமூகமானமுறையில் இடம்பெற்றுவருவதாகவும் அவசியமான பாதுகாப்பினை இலங்கை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்வதற்கான சுமூகமான காலநிலை நிலவி வருகின்றது.