கதிரையே கனவு: வடகிழக்கில் தேர்தல்?
கட்சி பேதமின்றி தேர்தலில் வென்று விட அரசியல் கட்சிகள் பலவும் வடக்கு கிழக்கில் தேர்தல் முறைகேடுகளில் குதித்துள்ளன.
ஒருபுறம் மதுபானம்,பணம் என அள்ளிவீசப்படுவது தொடர்கின்றது.
தேர்தலை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாக்காளர்களை கவர இவை அள்ளி வழங்கப்படுகின்றது.
இதனிடையே இன்னொரு புறம் குடும்பங்களிற்கு ஜந்து ஆயிரம்வரை பணமும் வழங்கப்பட்டுவருகின்றது.
இன்னொரு புறம் வாக்கு சாவடிகளிற்கு அண்மையில் தமது கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை வீசி எறிந்துள்ளனர்.
ஆயினும் வடகிழக்கில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இன்று புதன்கிழமை காலை 07.00 மணி முதல் இடம்பெற்று வருகிறது. பல வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர் அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.