தமிழரசா? ஜதேகவா? குழம்பியுள்ள மக்கள்?
தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பேராசிரியர் தேவராசா ஐதேகட்சியின் பரப்புரை கூட்டத்தில் பங்கெடுத்தமை வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
ஏற்கனவே ஐதேக விஜயகாலா அம்மையாரும், தனக்கு வாக்களிக்காவிட்டால் தமிழரசுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்வதும், மகிந்தவின் மொட்டு கட்சியை சேர்ந்த புஞ்சி நிலமே தனக்கு வாக்களிக்காவிடின் சம்பந்தனுக்கு வாக்களிக்குமாறு கேட்டிருக்கின்ற நிலையில் தேவராஜா எடுப்பார் கைப்பிள்ளையாக செய்லபடுவது சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
அதே நேரம் திரு தேவராஜா அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டும் என்பது முன்னாள் விரிவுரையாளர் றட்ணம் மற்றும் திருக்கேதீஸ்வரன் ஆகியோர் முயற்சித்து வருகிறார்கள் . சுமந்திரன் தரப்பு அம்பிகா சற்குணநாதனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.அதே போல திருகோணமலை குகதாசன் அவர்களும் பட்டியலில் இருக்கிறார்.அதே நேரம் சுமந்திரன் தரப்பு தேவராஜா அவர்களுக்கு மாகாண அமைச்சர் பதவி கொடுப்பதற்கு வாக்குறுதி கொடுத்து இருக்கிறது.இதற்காக சில நாட்களுக்கு முன் வீதிகளில் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு திரிந்தார்.
சில காலத்திற்கு முன்னர் வரை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதிகாரத்தில் இருந்த போது தேவராஜா வடமாகாண சுற்றுல்லா சபையின் தலைவராக பதவி வகித்தார் . அதில் இருந்து கொண்டும் தேவராஜா வினைத்திறனாக செய்லபட தவறியதன் காரணமாக சுரேன் ராகவன் தேவராஜா அவர்களை பதவி நீக்கம் செய்து இருந்தார் .சுற்றுலா சபையும் கலைக்கப்பட்டமைக்கு குறிப்பி;டத்தக்கது.