März 28, 2025

இலங்கையின் முன்னாள் பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பிய சஜித்

இலங்கையின் முன்னாள் பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பிய சஜித்

கட்சியின் பிரதித் தலைவர் தெரிவை சில நாட்களுக்கு பிற்போடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித் பிரேமதாச கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கோரிக்கை மூன்றாவது தரப்பின் ஊடாகவே விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த, அதற்கு ஆதரவளித்திருந்த ஏனைய உறுப்பினர்கள் அடங்கலாக 150க்கும் மேற்பட்டோர், ஐ.தே.கவிலிருந்து விலக்கப்பட்டனர்.

எனினும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.கவின் உப-தலைவருமான சஜித் பிரேமதாச கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.