கடைசி நேர உத்தி! போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு!
எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் முடுக்கவிடப்பட்டுள்ளது.
சுமந்திரன், மாவை ஆகியோரது வெற்றியை மையப்படுத்தி நெல்லியடி மற்றும் தெல்லிப்பழையில் பிரச்சார கூட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இளம் தரப்பு சொல்லிக்கொள்ளத்தக்கதாக வருகை தராததொரு கூட்டமாகவே அது இருந்தது.
இதனிடையே தனது அடுத்த நகர்வாக இறுதி நேர தேர்தல் பொய் செய்திகளை கசிய விட ஊடகங்கள் சிலவற்றை சுமந்திரன் கையினுள் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதற்கென பல மில்லியன் பணமும் அள்ளி வீசப்பட்டுள்ளது.
வுழமையாக தேர்தல் காலத்தில் இத்தகைய சகுனி தனங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தரப்பே முன்னெடுப்பது வழமையாகும்.
அதிலும் மாகாணசபை தேர்தலில் அனந்தி சசிதரன் கூடிய விருப்பு வாக்கு பெறுவதை தடுக்க போலி பத்திரிகை அச்சிடப்பட்டதை போன்று தற்போதும் புதிய முயற்சி இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய சதியொன்றை கடைசி நேரத்தில் அரங்கேற்ற முயற்சிகள் நடந்திருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
குறிப்பாக அச்சு ஊடகங்கள் இதற்கு சரிப்படாதென்பதை புரிந்து சமூக ஊடங்கள் மற்றும் இணைய ஊடகங்கள் நோக்கி கவனத்தை செலுத்த தொடங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தனது முகவர்கள் ஊடாக இதற்கான நிதியை முற்பணமாக செலுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.