கொரோனா சாட்சியங்களை அழித்த சீனா… வெளியான முக்கிய தகவல்
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்னர் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்திருந்ததாக ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் க்வோன் யுன் ஹூனான் தகவல் வெளியிட்டுள்ளார்.
விசாரணை குழுவினர் வூஹான் நகருக்கு செல்லும் போது நகரில் வன விலங்குகள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இருந்த சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்ததாக கொரோனா வைரஸ் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க உதவிகளை வழங்கிய இந்த பேராசரியர் குறிப்பிட்டுள்ளார்.
“ நாங்கள் ஹூனான் சந்தை தொகுதிக்கு சென்றோம், எனினும் அங்கு எதுவும் இருக்கவில்லை. வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றி வருவதை கூட அவர்கள் மறைத்தனர்” என பேராசிரியர் க்வோன் யுன் ஹூனான் கூறியுள்ளார்.
உலக நாடுகளில் முதல் முதலில் சீனாவிலேயே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. அங்கு 84 ஆயிரத்து 292 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதுடன் 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை மறைத்ததாக சீனா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை சீன அரசு மறுத்திருந்தது.
எது எப்படி இருந்த போதிலும் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 6 லட்சத்து 76 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு கோடியே 74 லட்சத்து 76 ஆயிரத்து 111 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 285 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 91 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் இதுவரை 35 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர்.