März 28, 2025

நகைச்சுவை நடிகர் ஐ சாக் இன்பராஜா அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவுநாள்

ஆறாண்டு கடந்ததுவோ
நீறுபூத்த உன்நினைவுகளில்
பாடிய உன் பாட்டோசை
பாதியில் நின்றது
பேசிய உன் விகடங்கள்
மௌனமானது
ஆடிய உன் அரங்கு
அதிர்ச்சியில் உறைந்தது
தேடிய உன் உறவுகள்
விழி நீர் சொரிந்தன
வரிசையான உன் விசாரிப்புகள்
ஊமையானது
நீங்கா உன் நினைவுகள்
அண்ணா எம் நெஞ்சைவிட்டு
பரமன் பாதங்களில்
சுகித்திருக்க
வேண்டும்
பாச உறவுகள்