März 28, 2025

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் பூட்டு?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஆகஸ் மாத இறுதியில் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் விமான நிலையத்தினை திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.