November 21, 2024

ஆக்ஸ்ட மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி?

கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசியே முதல் முதல் வெளிவரவுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இத் தடுப்பூசி ஆகஸ்ட் 10-12 நாட்களில் பதிவு செய்யப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்டு மூன்று அல்லது ஏழு நாட்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்து விடும் என  ரஷியாவின் ‘புளூம்பெர்க்’ செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி முதல் கட்டமாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெற்றிகரமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பது கடந்த 13 ஆம் நாள் தொடங்கியுள்ளது.
பொதுவாக ஒரு தடுப்பூசி 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொண்ட பின்னர்தான் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இதுதான் வழக்கமான நடைமுறை. இது பல மாதங்களுக்கு செல்லும்.
ஆனால் இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனையை முன்கூட்டியே முடித்துக்கொண்டு, இந்த தடுப்பூசியை மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு முன்பாகவே மக்கள் பயன்பாட்டுக்கு விட்டு விடுவது என்று ரஷியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.