März 28, 2025

நவீன ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்: கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்…. 

சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கி மற்றும் நவீன ஆயுதளங்களோடு நுழைந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 60 பேர் காயமடைந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபை நேற்று தெரிவித்துள்ளது.

இதில் அங்கு இயங்கி வந்த சந்தையை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சூறையாடியதோடு, வீடுகளையும் எரித்துள்ளனர்.

மக்களை பாதுகாப்பதற்கு அரசு பாதுகாப்பு படைகளை அனுப்பும் என்று அந்நாட்டு பிரதமர் அப்தல்லா ஹம்தோக் அறிவித்துள்ளார்.

இதுவரை இந்த தாக்குதலுக்கு காரணமாக எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

2003 முதல் சூடான் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிரே நடைபெற்று வரும் யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு சிலர் பதட்டமான பகுதிகளிலிருந்து வேறு இடத்திற்கு குடியேறியும் உள்ளனர்.