November 22, 2024

துயர் பகிர்தல் திருமதி பரமேஸ்வரி சந்திரசேகரம்

பரமேஸ்வரி சந்திரசேகரம்

 

திருமதி பரமேஸ்வரி சந்திரசேகரம்

தோற்றம்: 11 நவம்பர் 1942 – மறைவு: 27 ஜூலை 2020

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி கண்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சந்திரசேகரம் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி(அவுஸ்திரேலியா), ஜெயந்தி(நோர்வே), சுகந்தி(நோர்வே), தமயந்தி(ஜேர்மனி), லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார்(அவுஸ்திரேலியா), ரவி(நோர்வே), இராசகுணசிங்கம்(ராசன்- இலங்கை), ஜெகனேசன்(ஜெகன்- ஜேர்மனி), கஜிதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், ஞானேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி, இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நாகேஸ்வரி(பாப்பா), பரமநாதன்(அப்பன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், சிவராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலகவதி, தனலக்சுமி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஜெயபிரவீன், ஜெயபிரமீலன், ராஜ்பிறஜி, புவிகரன், புவிசங்கர், சுஜாத்தா, ஜசிந்தா, மகிந்தா, மஞ்சுளா, பிரதீபன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற பத்மசிறி, நந்தசிறி, புவனசிறி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுப்பிரமணியம்(கனடா) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
மேனன், சுபாங்கி, சுதேசன், சுகீதன், தஷாயினி, கிருஷாயினி, சாருண்யா, சாருஜன், தாருஜன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கர்ஷிகன், வனுஷியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ரவி(மருமகன்)
தொடர்புகளுக்கு:-
வசந்தி – மகள் Mobile : +61 45 106 3684   
ஜெயந்தி – மகள் Mobile : +47 91 87 6774   
சுகந்தி – மகள் Mobile : +47 96 97 4106   
தமயந்தி – மகள் Mobile : +49 174 416 0895   
லோகன் – மகன் Mobile : +94 77 717 6551   
ரவி – மருமகன் Mobile : +47 46 92 9226