மன்னாரில் மத ரீதியில் பிரச்சாரம்?
மதரீதியில் தமது மதம் சார்ந்தவர்களை வெல்ல வைக்க மன்னாரில் முக்கிய தரப்புக்கள் காய் நகர்த்தலை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் மதரீதியில் வன்முறைகளை மன்னார் மாவட்டத்தில் தூண்டக்கூடிய வகையிலான வெறுப்பு பேச்சுக்களை முகநூல் மற்றும் வாட்சப் மூலம் பரப்புவதாக இணைய வழி வன்முறைகள் தொடர்பான பிரிவில் மாவட்ட தேர்தல் அதிகாரி முறையிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தினை மையமாக்கொண்டு எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஓர் அணியின் பெயரில் சமய விடயங்களை மையம் சார்ந்து வெறுப்புகளை ஏற்படுத்துவதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
இதன் காரணமாக மத முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளமையினால் அதனை கண்டறிவதற்கும் பதிவேற்றம் செய்தவர்களை உறுதி செய்யும் வகையிலும் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இதன் ஆதாரங்களும் திரட்டப்பட்டு சம்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு திரட்டப்பட்ட விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.