November 22, 2024

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚செல்லமுத்து‘ நாவல் பற்றிய திறந்த உரையாடுகை.

ஈழத்தின் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‚செல்லமுத்து‘ நாவல் பற்றிய திறந்த உரையாடுகை.
26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு மரநிழலின் கீழ் இக்கூடுகை ஆரம்பமானது. ‚கச்சானும் கதையும்‘ எனும் சாராம்சத்தில் நிலக்கடலை உண்டபடியே பேசினோம்.
மூத்த இளைய படைப்பாளர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டு சுதந்திரமாக கருத்துக்கள் பகிர்ந்தனர்.
‚செல்லமுத்து‘ மிகச்சிறந்த நாவல் என்று கருத்து வந்தது போல, இது நாவல்தானோ? எனும் கேள்வியும் வந்தது.
ஏற்றியும், போற்றியும், குறை காட்டியும், நிறைவின்மை சொல்லியும் கருத்துக்கள் வந்தன.
யாவருமே நாவலினை வாசித்திருந்தார்கள்.
ஈழத்தில் வெளியான நாவல்களில் மொழி, களம் அடிப்படையில் ‚செல்லமுத்து‘ தனித்துவமே என்றும், இதில் செப்பனிட தேவையுண்டென்றும், சிலவற்றை சேர்த்தலே இன்னும் மேன்மை என்றும் கருத்துக்கள் வந்தன.
‚செல்லமுத்து‘ நாவலினை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், பாடத்திட்டத்தில் சேர்க்கத் தகுந்தது என்றும் கருத்துக்கள் வந்தன.
அச்சுப்பிழைகள் பற்றியும் கருத்துக்கள் வந்தன.
யாருமே ‚செல்லமுத்து‘ பாத்திரம் ‚மனதைத் தைக்கவில்லை‘ எனச்சொல்லவில்லை.
இன்னும் தொடர்வோம்
இலக்கியத்தில் படர்வோம்.