Mai 4, 2024

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர்.

இவர்கள் சென்ற பின்னர் ஒரு குழுவினர் குறித்த கட்டடத்தின் கதவை உடைத்து உள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் ஹூஸ்டன் துணைத் தூதரக நேற்றுடன் மூடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கம் வகையில் சீனாவின் தென்மேற்கு நகரமான செங்டுவில் அமெரிக்கப் பணியை நிறுத்த சீனா உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கை உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையிலான உறவுகளில் கூர்மையான சரிவைக் குறிக்கிறது.

ஹூஸ்டன் மிஷன் மூடப்படுவதற்கான 72 மணி நேர காலக்கெடு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

மேலும் சீன அதிகாரிகள் அங்கிருந்து லொரிகளில் பெரிய அளவிலான சாக்கு மூட்டைகள் மற்றும் ஆவணங்களை ஏற்றுவதையும், மேலும் டம்ப்ஸ்டர் தொட்டிகளை எறிவதையும் காண முடிந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் கொடிகளை ஏந்திய ஒரு சிறிய குழு அவர்களை கேலி செய்யும் வகையில் செய்யப்பட்டனர்.

இதேவேளை, அமெரிக்காவுக்கு பதில் கொடுக்கும் வகையில் செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு சீனா உத்தரவிட்ட நிலையில் செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் டஜன் கணக்கான பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ட்விட்டரில் கூறுகையில்,

“செங்டூவில் அமெரிக்க பணி திங்கட்கிழமை காலை 10 மணி வரை உள்ளது” என்றார்.

பரவலான உளவு பார்த்தல் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு என்று குற்றம் சாட்டப்பட்டு, சீனாவின் ஹூஸ்டன் தூதரகத்தை மூட செவ்வாயன்று வாஷிங்டன் உத்தரவிட்டது.

எதிர் நடவடிக்கைகள் குறித்து சீனா எச்சரித்த நிலையில், வியாழக்கிழமை அமெரிக்காவின் செங்குடு தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டது.

“சீனா-அமெரிக்க உறவுகளில் தற்போதைய நிலைமையை சீனா பார்க்க விரும்புவதல்ல, இவை அனைத்திற்கும் அமெரிக்கா தான் பொறுப்பு” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செங்டூவில் தூதரகத்தை மூடுவதற்கான உத்தரவுக்கு நகர மக்கள் மிகவும் ஆதரவளித்துள்ளனர், அமெரிக்காவின் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு சீனா வலுவான நிலைப்பாட்டை எடுப்பதை ஆதரிப்பதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.