März 28, 2025

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!

உதிக்கும் திசையை நோக்கி உன்னத பயணம்!!தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்,பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்ட ஆலோசகர், க,சுகாஸ், ஆகியோரை உள்ளடக்கிய முன்னணி செயற்பாட்டு அணி ஒன்று தென் தமிழீழத்தில் , தமிழ்த்தேசிய நிலைப்பிற்கான பரப்புரைகளிற்காக களமிறங்கியுள்ளது. நேற்றைய தினம், அம்பாறை மாவட்டத்திலும், இன்று மட்டக்களப்பிலும் , உயிரினும் மேலான உறவுகளை சந்தித்து கலந்துரையாடினர், பெருந்திரளாக அமோக வரவேற்பளித்த தென்தமிழீழ மக்கள், தமது குறைநிறைகளையும், அவலங்களையும் , தமக்கானவர்களுடன்பகிர்ந்து கொண்டனர். தமிழீழ தேசியத்தலைவரின் இலட்சியப் பற்றோடு. எதுவித விட்டுக் கொடுப்புகளுமின்றி, கொண்ட இலட்சியத்தில் உறுதியோடு பயணிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கே வாக்களிப்போம் என்றும், துரோகிகளையும், சிங்கள அடிவருடிகளையும் வேரோடு களைவோம் என்றும் அறைகூவல் விடுத்துள்ளனர்.