கூட்டமைப்பினை வெல்ல வைக்க கோத்தா முயற்சி?
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக ஒன்றுமில்லை.குறிப்பாக சர்வதேச விசாரணை கூட கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் அதனை பற்றி பேசுகின்றனவெனின் அதில் உள்நோக்கம் உள்ளது.
அதிலும் அரச தரப்பினில் இவ்விடயம் தொடர்பில் ஊதிப்பெருப்பிக்கபடுகின்றதென்பது கூட்டமைப்பினை வெல்ல வைக்க முன்னெடுக்கப்படும் சதி முயற்சியே.
ஏற்கனவே அரசிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கூட்டமைப்பு வென்று அரசுடன் இணைந்து கொள்ளுமென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதi தெரிவித்தார்.
அதிலும் 2013 ஆம் அண்டைய மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் கைவிடப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.